பொருளாதாரத்தை கையில் எடுக்கும் மைத்திரி

நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் சம்பந்தமாக தீர்மானங்களை எடுக்கும் அமைச்சரவை உபகுழுவின் கூட்டங்களில் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் பொருளாதார முகாமைத்துவ உப குழுவின் அடுத்த கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே பொருளாதார முகாமைத்துவ உபகுழுவின் தலைவராக செயற்பட்டு வந்தார்.

இந்த நிலையில், தற்போதுள்ள பொருளாதார நிலைமையை சரியான வழிமுறைக்கு கொண்டு வரும் நோக்கில் ஜனாதிபதியும் பிரதமருடன் இணைந்து கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னர் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள ஜனாதிபதி முயற்சித்த போதிலும் அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை எனவும் இதனால், அடுத்த கூட்டத்தில் இருந்து தொடர்ந்தும் கலந்து கொள்ள ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here