பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 600 ஆக உயர்த்தப்பட உள்ளது

நாட்டின் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டின் இறுதிக்குள் 600 ஆக உயர்த்தப்பட உள்ளது.

இந்த அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்ட போது நாட்டின் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 438 ஆக காணப்பட்டது.

தற்போது நாட்டின் பொலிஸ் நிலையங்களின் எண்ணிக்கை 478 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மேலும் மூன்று பொலிஸ் நிலையங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.

மேலும் 25 பொலிஸ் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் சில வாரங்களில் இந்த பொலிஸ் நிலையங்களும் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.

பண்டாரவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹல்துமுல்ல, அம்பகஸ்தூவ மற்றும் போகஹாபுர ஆகிய இடங்களில் இன்று பொலிஸ் நிலையங்கள் அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here