மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரிக்கு எதிராக ஊழல் வழக்கு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிரான ஊழல் வழக்கில் அடிப்படை எதிர்ப்புகள் சம்பந்தமான உத்தரவுகளை எதிர்வரும் 31 ஆம் திகதி வழங்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று இதனை அறிவித்துள்ளார்.

வருடந்தோறும் வழங்க வேண்டிய சொத்துக்கள் தொடர்பான விபரங்களை 5 ஆண்டுகளாக சமர்பிக்கவில்லை என குற்றம் சுமத்தி மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here