கடையடைப்புப் போராட்டத்திற்கு இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு!

இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கம் வட,கிழக்கில் நடத்தப்படவுள்ள பூரண கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் முகமாக (27) வியாழக்கிழமை தொடர்போராட்டம் இடம்பெறவுள்ள நிலையில் தமிழ் ஆசிரியர் சங்கம் ஆதரவு தெரிவித்து அறிக்கை விடுத்துள்ளனர்.

இந்த அறிக்கையினை தமிழ் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன் ஆகியோர் இணைந்து விடுத்துள்ளதுள்ளனர். குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாவது,

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை. இங்கு வாழ்கின்ற மக்களில் இயல்பு நிலையில் மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.

மாற்றங்கள் ஏற்படுவதற்காக பல்வேறு விட்டுக்கொடுப்புகளையும் தியாகங்களையும் எமது இனம் சார்ந்த கட்சிகளும் மக்களும் செய்தபின்னரும் எதுவுமே நடைபெறவில்லை.

ஆயுதப்போராட்டம் அறவழிப்போராட்டமாக மாறி அனைத்துத் தரப்பினரும் வீதியில் நாட்கணக்காக மாதக்கணக்காக போராடும் நிலை உருவாகியுள்ளது.

காணிக்காகவும் இழந்த அல்லது காணாமல்போன மக்களுக்காகவும் , அரச தொழிலுக்காகவும் மாதக்கணக்கில் போராடிவேண்டிய உள்ளது.

எதையும் யாரும் கண்டுகொள்வதாக இல்லை. இந்த நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கும் இத்தகைய அறவழிப்போராட்டம் வெற்றியளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இதற்காக வடக்கு கிழக்கில் வாழுக்கின்ற அனைத்து மக்களும் விசேடமாக கல்விப்புலம் சார்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து வியாக்கிழமை நடைபெறும் முழு அடைப்புக்கு பூரண ஆதரவை வழங்குவதோடு இதுபோன்ற முனைப்புக்களைத் தொடர்ந்தும் எடுக்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here