ஜனாதிபதியும், பிரதமரும் முதலமைச்சர்களுடன் பேச வேண்டும்!

குப்பை முகாமைத்துவ அதிகாரசபை உருவாக்குவது அரசியல் அமைப்பிற்கு முரணானது என மேல் மாகாணசபை தெரிவித்துள்ளது.

மேல் மாகாணசபையில் நேற்று இது தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேல் மாகாணசபையில் ஏற்கனவே குப்பை முகாமைத்துவ அதிகாரசபையொன்று இயங்கி வருவதாகவும் புதிதாக அதிகாரசபையொன்று உருவாக்குவது அரசியல் அமைப்பிற்கு முரணானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது அரசியல் அமைப்பின் 13ம் திருத்தச் சட்டத்திற்கு முரணானது என மாகாணசபை உறுப்பினர் சுசில் கிந்தல்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை கழிவு அகற்றல் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மாகாண முதலமைச்சர்களுடன் பேசி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டுமென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் ஒவ்வொருவரும் எதேச்சாதிகாரமான தீர்மானங்களை எடுக்கக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிதாக அதிகாரசபை அமைக்கும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்தை எதிர்த்து சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் ஏகமனதாக மேல் மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here