பூரண கதவடைப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள் அழைப்பு

பூரண கதவடைப்புக்கு ஒத்துழைப்பு தாருங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அழைப்பு

நாளை  மேற்கொள்ளப்படவுள்ள பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கி தங்களின் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமாறு கிளிநொச்சி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின உறவினர்களின் சங்கத்தின் இணைப்பாளர் ஆனந்தராஜா லீலாதேவி தெரிவித்துள்ளார்.
நேற்று (25) கிளிநொச்சியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்  இவ்வாறு  அழைப்பு விடுத்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எங்களது உறவினர்களுக்கு நல்லதொரு தீர்வை  வழங்குமாறு அரசை வலியுறுத்தும் வகையில் மேற்கொள்ளப்படவுள்ள போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள், வர்த்தக சமூகங்கள், தொழிற்சங்கங்கள், அரசியற்கட்சிகள் உள்ளிட்ட எல்லா அமைப்புகளையும் ஒன்றுதிரண்டு தங்களுக்கு ஆரதரவு தருமாறும் லீலாதேவி அழைப்பு விடுத்துள்ளார்.
 கடந்த எட்டு வருடங்களாக எங்களுக்காக பலர் செயற்படுவார்கள், எங்களுக்கு நல்லதொரு தீர்வை பெற்றுத் தருவார்கள் என்று நம்பி ஏமாந்துவிட்டோம் எனவேதான் அவர்களை  இனியும் நம்புவதை விடுத்து  நாங்களே எங்களுக்கான தீர்வை பெறும் வகையில் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றோம் எனவே முடிந்தால் எங்களது போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்
Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here