பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

ஹம்பாந்தோட்டை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகநபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

கடந்த வருடம் குருநாகல் – மாஸ்பொத பகுதியில் பொலிஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரே துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் டீ.கே.சமிந்த என்றழைக்கப்படும் மாத்தறை ரொசான் என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபரை கைது செய்வதற்காக கொழும்பில் இருந்து அனுப்பப்பட்ட சிறப்பு பொலிஸ் குழு மீது சந்தேகநபர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, பொலிஸ் குழுக்களுக்கும் சந்தேகநபரருக்கும் இடையில் பரஸ்பர துப்பாக்கி பிரயோக இடம்பெற்ற போது, சந்தேகநபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்

இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளும் ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here