இராணுவ ஆட்சியை நோக்கி செல்லத் தயாராகிறதா நல்லாட்சி அரசு?

ஆனால், இங்கு குப்பைக்குள்ளும் அரசியல் மாபியா புகுந்துள்ளது. இந்நிலை மாறவேண்டும். இதை ஒரு தேசிய பிரச்சினையாகக் கருதி தீர்மானம் எடுக்கப்படவேண்டும்.

பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைத் தேடுவதைவிட விசேட செயலணி அமைத்து அடக்குமுறையைக் கையாள்வதற்கே அரசு முயற்சிக்கின்றது.

இது ஜனநாயக விரோத செயலாகும். நல்லாட்சி, ஜனநாயகம் எனக்கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த அரசு, கடந்த அரசு போன்று மக்களை ஒடுக்கும் இராணுவ ஆட்சியை நோக்கிச் செல்லவா விசேட செயலணியை அமைக்கப் பார்க்கின்றது.

இந்தச் செயலணிக்கு நியமிக்கப்படவுள்ள நபர் குறித்து எமக்குப் பிரச்சினை இல்லை. ஆனால், இந்த முறைமையே தவறு என்றுதான் சுட்டிக்காட்டுகின்றோம்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட்டு, மேலும் சில சுயாதீன குழுக்கள் அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இப்படியொரு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளமை பயங்கரமானதாகும்.

மக்கள் பிரச்சினைக்கு அடக்குமுறை வழியல்ல. அதைத் தேடிச் செல்வதும் முறையல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here