பசிலின் மற்றுமொரு மோசடி குறித்து FCID விசாரணை

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிரான மற்றுமொரு மோசடி வழக்கு தொடர்பில் நிதி மோசடி விசாரணை பிரிவு, விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஷெரடன் என்ற ஹோட்டல் திட்டத்தில் பணம் முதலீடு செய்வது தொடர்பில் விசாரணை நடவடிக்கைக்காக பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான திருக்குமார் நடேசன் கடந்த 27ஆம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

குறித்த நிறுவனத்தில் பசில் ராஜபக்சவுக்கு நெருக்கமான வர்த்தகர் ஒருவரே பணம் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஹோட்டல் திட்டத்திற்காக 9 பில்லியன் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. திருக்குமார் நடேசனுக்கு நெருக்கமான வர்த்தகர் அரசாங்கத்தின் உயர் மட்டத்தில் பதவி வகித்த ஒருவராகும். அத்துடன் அவர் ஐக்கிய தேசிய கட்சியின் மாகாண சபை உறுப்பினராகும்.

வர்த்தகருக்கு இந்த பணம் எவ்வாறு கிடைத்ததென்பது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், அந்த பணம் டுபாய் சைப்ரஸ், மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் கணக்குகளில் வைப்பிடப்பட்டுள்ளது.

பணம் வைப்பிடப்பட்டுள்ள முறை தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவு மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த நிறுவனத்தின் பங்குகளில் 1 வீதம் திருக்குமார் நடேசனுக்கு சொந்தமானவைகள் என தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here