இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டம்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மேதினக்கூட்டமும், பேரணியும் இன்று கினிகத்தேனை நகரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கூட்டம் கினிகத்தேனை நகர பஸ் தரிப்பிடத்தில் நடைபெற்றதுடன், கினிகத்தேனை விநாயகர் ஆலயத்தின் முன்றலில் ஆரம்பமான இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின பேரணியைத் தொடர்ந்து மே தினக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இ.தொ.கா.தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்துசிவலிங்கம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், கட்சியின் மத்திய மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

மேலும், இந்த மே தின கூட்டத்தில் பல மாவட்டங்களிலிருந்தும் சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடதக்கது.

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here