காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய மே நாள் கிளிநொச்சியில்!

காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில்! ஆரம்பம்


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில்  தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில் நடைபெற்ற்றுக்  கொண்டுள்ளது   தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக்  கிளையின்  ஏற்பாட்டில்  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி  ஏற்பாடு செய்யப்பட்ட  இன் நிகழ்வு

காலை ஒன்பது மணிக்கு கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றில் ஆரம்பிக்கப்பட்ட மே தின ஊர்வலம் டிப்போச் சந்தியை சென்றடைந்தது. அங்கு பொதுக் கூட்டம் இடம்பெற்றுக்  கொண்டுள்ளது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களை விடுதலை செய்யக் கோரி  தமிழ்தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சிக்  கிளையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற ஊர்வலத்தில்  காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் அரசில் கைதிகளை சித்தரிக்கும் வகையில் ஊர்திகளும் காணப்பட்டன..

இந்த மேதின நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா, மாகாண சபை உறுப்பினர் பசுபதிபிள்ளை உள்ளிட்டவர்களும் காணாமல் ஆக்கப்ட்டவர்களின் உறவினர்கள் மக்கள்  எனப் பலர்  கலந்துகொண்டனர்.

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here