துறைமுக அபிவிருத்தி பணிகளுக்காக இந்தியாவுடன் இணையவுள்ள இலங்கை

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் இறங்குத்துறையின் அபிவிருத்தியை இந்தியாவுடன் இணைந்து மேற்கொள்ளும் அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வெளியிடவுள்ளது.

இதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை அண்மையில் இலங்கையின் பிரதமர் இந்தியாவுக்கு சென்றிருந்த போது கைச்சாத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்ற துறைகளும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

இதற்கிடையில் 500 மெகாவோட்ஸ் சக்தி கொண்ட இயற்கை எரிவாயு மின்சார உற்பத்திக்கான உத்தியோகபூர்வ கடிதத்தை இந்தியா இந்த மாத இறுதியில் இலங்கையிடம் கையளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் சம்பூரில் 50 மெகாவோட்ஸ் சக்திக்கொண்ட சூரியமின்னுற்பத்திக்கான பணிகளையும் இந்தியா முன்னெடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here