அவசர நிலைமைகளின்போது செயற்படுவதற்காக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் தலைமையில் படைப்பிரிவு ஒன்றை அமைக்கும் ஜனாதிபதியின் யோசனை குறித்து தம்மால் வெளியிடப்பட்ட அறிக்கையை தாம் பொறுப்புடன் ஏற்றுக்கொள்வதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை அமைச்சரவை தீர்மானங்களை ஊடகங்களுக்கு அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கூறுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் தமக்கு அனுமதி வழங்கியதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறித்த செய்தி பொய்யானது என்று அமைச்சர் ஜோன் செனவிரட்ன வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே ராஜித தமது பதிலை வழங்கியுள்ளார்.

தகவல் வழங்கும் சட்டத்தின் கீழ் அமைச்சரவையில் இடம்பெற்ற இந்த செய்தியையும் தாம் ஊடகங்களுக்கு வழங்கியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்சவின் தரப்புக்கு செல்ல முயற்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களே மாற்றுக்கருத்துக்களை கூறிக்கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.