நல்லாட்சியே சர்வதேச குற்றச்சாட்டுக்களில் இருந்து இலங்கையை காப்பாற்றியது

நல்லாட்சி அரசு உருவாக்கப்பட்டமையால்தான் சர்வதேச குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை பெற்று சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் நாடாக இலங்கையை மாற்றினோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கண்டி-கெட்டம்பே மைதானத்தில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

எத்தகைய சூழ்ச்சிகள் சவால்கள் வந்தாலும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும், சுதந்திர கட்சி வெளிப்படையான கட்சி என்றும் கூறினார்.

மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் உள்ள எவரும் கருத்துக்களை வெளியிடவும் யோசனைகளை முன்வைக்கவும் கலந்துரையாடும் உரிமை சகலருக்கும் உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

ஒரு இனம் பற்றி மட்டும் சிந்தித்து, மற்றொரு இனத்தை அடிமைப்படுத்தி நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்த முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here