ஏன் தோல்வியடைந்தேன்? – முதன்முறையாக மனம் திறந்த ஹிலாரி கிளின்டன்!

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி அமெரிக்காவின் 45-வது ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

பலர் களத்தில் இருந்தாலும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்ட் ட்ரம்ப்புக்கும் மற்றும் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளின்டனுக்கும் இடையேதான் தீவிரமான போட்டி நிலவியது.

ட்ரம்ப், தனது பிரசாரங்களின் மூலம் தொடர்ந்து பெண்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களுக்கு எதிராகவும், அகதிகளுக்கு எதிராகவும், கறுப்பின மக்களுக்கு எதிராகவும் வெறுப்பை கக்கும் பேச்சை மேடைகளில் உதிர்த்து வந்தார்.

பல பத்திரிகைகளால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளும் அவருக்கு எதிராகவே இருந்தது.

அமெரிக்காவுக்கு முதன்முறையாக ஒரு பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று பரவலாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலவரம் 2016-ம் ஆண்டு, அக்டோபர் 27-ம் தேதி வரை தான் தொடர்ந்தது.

அக்டோபர் 28-ம் தேதி அமெரிக்க எஃப்.பி.ஐ-ன் இயக்குநர் ஜிம் கோமி (Jim Comey) ஹிலாரி மின்னஞ்சல் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் பற்றி மறுபடியும் விசாரிக்கப்படும் என்றார்.

உலக பத்திரிகைகள் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை விட இந்த குறிப்பிட்ட விஷயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தன.

இதையடுத்து, நவம்பர் 8-ம் தேதி நடந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த பிறகு முதன்முறையாக மனம் திறந்துள்ளார் ஹிலாரி கிளின்டன்.

இது குறித்து அவர் கூறுகையில்,

என் பிரசாரத்தில் குறைகள் இருந்தன. ஆனால், ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றியடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.

ஆனால், எப்.பி.ஐ திடீர் அறிவிப்பு, விக்கிலீக்ஸ் மற்றும் ரஷ்ய தலையீடு ஆகியவையே என் வெற்றிக்கு பாதகம் விளைவித்தன.

தேர்தலுக்கு முன்னதான கடைசி 10 நாள்களில் நடந்த சம்பவங்கள்தான் என் தோல்விக்கு வித்திட்டது என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here