யாழில் சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்க கோரி கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

குறித்த கவனயீர்ப்பு போராட்டம் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இன்று மாலை யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

யாழ்.ஊடக அமையத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் தரப்புக்கள் இணைந்து இன்றைய ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.

யாழ். பிரதான வீதியில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக கூடி ஊடகவியலாளர்கள் படுகொலை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிக்க வலியுறுத்தியும், காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலார்கள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்தக் கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது ஊடகவியலாளர்கள் வாயை கறுப்பு துணியால் கட்டியவாறு கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here