வவுனியாவில் 69வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 69வது நாளாகவும் இன்று தொடர்கிறது.

குறித்த போராட்டம் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களின் வெளிப்படுத்தலை வலியுறுத்தியும், அரசியல் கைதிகளை விடுவிக்க கோரியும், அவசர காலச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டடுள்ள மக்கள் கருத்து தெரிவிக்கையில், இன்றுடன் 69ஆவது நாளாகவும் வீதியோரத்தில் இருக்கின்றோம்.

இதுவரை அரசாங்கம் எந்த ஒரு பதிலையும் தராது கண்டுகொள்ளாதது இருப்பது ஏன்? என காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, இந்த போராட்டம் தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என அவர்கள் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here