விடுதலைப் புலிகளே உருவாக்கினார்கள்! மக்கள் கூட்டமைப்பை ஆதரிக்க காரணமும் அதுவே

சிறந்த ஒரு அரசியல் தலைமைகள் வேண்டும் என்ற நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதாக வடமாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராசா தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் புரள்வதாகவும் அவர் கூறியுள்ளார். ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் மேன தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட எவரும் தமிழ் தேசிய இனத்திற்கான தீர்வை பெற்றுக்கொடுக்கப்போவதில்லை.

அது சாத்தியப்படாத ஒன்றாகவே இருக்கின்றது. சிங்கள தலைமைகள் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுக்காமல் காலம் கடத்தியுள்ளனர்.

இதற்கான வரலாறுகள் நிறையவே உள்ளன. தம்மிடம் சிறந்த ஆயுத போராட்ட இயக்கம் இருந்தாலும், சிறந்த அரசியல் தலைமைகள் வேண்டும் என விடுதலைப் புலிகள் கருதினார்கள்.

அதற்காக வேண்டியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அதன் காரணமாகவே தமிழ் மக்களும் கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

எனினும், இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் புரள்கின்றது. எனவே, இந்த சந்தர்ப்பத்தில் அடுத்த கட்ட செயற்பாட்டை தீர்மானிக்க வேண்டிய பொறுப்பு மக்களிடமே இருக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here