தமிழகத்தின் பிரபல கவிஞர் வைரமுத்துக்கு சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருது மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. 64 வது தேசிய திரைப்பட விருது விழா டெல்லியிலுள்ள விஞ்ஞான்பவணியில் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமையில் நடைபெற்றது.

இதில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த தர்மதுரை படத்தில் இடம்பெற்ற எந்தபக்கம் பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான விருது வைரமுத்துக்கு வழங்கப்பட்டது.

அத்துடன் தமிழின் சிறந்த திரைப்படமாக ஜோக்கர் படத்திற்கு வழங்கப்பட்டடதுடன் அதன் இயக்குனர் ராஜூமுருகன்விருதினை பெற்றுக் கொண்டார். 24 படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருது திருநாவுகரசுக்கும், ஜனதா கெரஜ் தெலுங்கு படத்திற்காக சிறந்த நடன இயக்குனர் விருது ராஜூ சுந்தரத்திற்கும் புலிமுருகன் படத்திற்காக சிறந்த சண்டை பயிற்சிக்கான விருது பீட்டர் ஹெயினுக்கும் வழங்கப்பட்டது.