வெளிநாட்டுக்கு சென்ற ஐந்து இலங்கை பெண்கள் மாயம்

பணியாளர்களாக வெளிநாடுகளுக்குச் சென்ற ஐந்து இலங்கை பெண்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

சவுதி அரேபியா மற்றும் லெபான் ஆகிய நாடுகளுக்கு பணியாளராக சென்ற ஐவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகச் செயலாளர் நலின் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இரக்குவாணை பகுதியை சேர்ந்த நிர்மலா பெரியசாமி, காலியை சேர்ந்த அனுலவதி டீ சில்வா, சாமிமலை பகுதியை சேர்ந்த வடிவேலு விஜயலலிதா, உகன பகுதியை சேர்ந்த பிரேமவதி மற்றம் பிங்கிரிய பகுதியை சேர்ந்த சியாமலி ஆகியோரே இவ்வாறு காணமல் போயுள்னர்.

2006 மற்றும் 2009 ஆம் ஆண்டு குறித்த ஐவரில் மூன்று பேர் சவுதி அரேபியா மற்றும் லெபனானிற்கு சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளதாக நலின் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

காணமல் போன குறித்த பெண்கள் தொடர்பில் தகவல் கிடைத்தால் ,011 4379328 011 2864136 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை மேற்கொள்ளுமாறும் நலின் ராஜபக்ஸ கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here