இலங்கையில் தனிநபர் வருமானத்தில் பாரிய வீழ்ச்சி

அரசாங்கத்தின் திறனற்ற பொருளாதார கொள்கையின் காரணமாக இலங்கையில் தனிநபர் வருமானத்தில் பாரியளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே இதை தெரிவித்தார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் திறனற்ற பொருளாதார கொள்கையின் காரணமாக தனிநபர் வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், பொருளாதார வளர்ச்சி வீதமும் குறைவடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமைக்காக கீதா குமார சிங்கவின் பாராளுமன்ற உறுப்புரிமைக்கு வேட்டு வைக்க முயற்சிக்கும் அரசாங்கம், வெளிநாட்டு பிரஜையாக இருந்து இலங்கை நாணயத்தாளில் கையொப்பமிட்டதுடன், மோசடிக்கு வித்திட்ட மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும். சரத் பொன்சேகாவை வைத்து அடக்குமுறையை கொண்டுவருவதற்கு அரசு முனைகின்றது. முடியுமானால் எம்மை அடக்கிப்பாருங்கள். கூட்டு எதிர்க்கட்சியிலிருக்கும் 52 பேரும் சிறை செல்ல தயாராக இருக்கின்றோம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here