தலதா மாளிகைக்கும் செல்கின்றார் மோடி!

இலங்கைக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கண்டி தலதா மாளிகைக்குச் சென்று மதவழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

இலங்கையில் நடைபெறவுள்ள சர்வதேச வெசாக் தினக் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாட்கள் பயணம் மேற்கொண்டு எதிர்வரும் 11 ஆம் திகதி இந்திய பிரதமர் மோடி கொழும்பு வரவுள்ளார்.

இந்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள ஹட்டன், கிளங்டன் வைத்தியசாலையை 12ஆம் திகதி மோடி திறந்து வைக்கவுள்ளார். மலையக பயணத்தின் போதே அவர் தலதா மாளிக்கைக்கும் செல்லவுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மாகாண முதல்வர்கள் உட்பட முக்கிய பிரமுகர்களும் அவருடன் உடன் செல்லவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here