மீண்டும் யுத்தத்தை ஏற்படுத்த மகிந்த முயற்சி

மகிந்த தலைமையில் இன்னுமோர் யுத்தத்திற்கு வழி அமைத்துக் கொண்டு வரப்படுகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்த அவர்,

இப்போது தேசப்பற்றாளர்களைப் போல கருத்து வெளியிட்டு கொண்டு வரும் ராஜபக்சவினர் கடந்த காலங்களில் ஊழல்களையும் கொலைகளையும் செய்தவர்களே.

மகிந்த ராஜபக்சவின் மனைவியான சிராந்தி ராஜபக்ச வெசாக் பண்டிகை ஒன்றிக்காக பாரிஸ் விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார்.

அவர் அங்கு நான்கு நாட்களும், மூன்று இரவுகளும் தங்கினார். ஆனால் அதற்கான மொத்த செலவு 10. 4 மில்லியன்களாகும் இவை யாருடைய பணம் அனைத்தும் அரசாங்கத்தின் பணமே ஆகும்.

அதேபோன்று கோத்தபாயவின் மகள் அமெரிக்கா பல்கலைக்கழகம் ஒன்றில் கற்று கொண்டு வந்தார். அவரை பல்கலைக்கழகத்திற்கு அழைத்துச் செல்ல இலங்கையின் இராணுவத்தரப்பில் இருந்து இருவர் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

அவர்களுக்கு இரு தரப்பில் இருந்தும் ஊழியம் வழங்கப்பட்டிருந்தது. இவ்வாறான ஊழல்களையும், அதிகாரங்களை முறைகேடாக பயன்படுத்தியவர்களுமே இன்று நல்லவர்களைப் போல் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மகிந்த ராஜபக்ச தலைமையில் நாட்டுக்கு பாரிய ஆபத்து ஏற்படுத்த திட்டம் தீட்டப்பட்டுக் கொண்டு வரப்படுகின்றது.

தற்போது பொய்களை பரப்பிக் கொண்டு வருவதனைப்போன்று நாட்டில் இனவாதத்தினையும் இனக்கலவரங்களையும் ஏற்படுத்த முயற்சி செய்து கொண்டு வரப்படுகின்றது.

மீண்டும் 88 மற்றும் 89 ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கலவரங்களைப் போன்று நாட்டை வன்முறைக்கு உட்படுத்தி, மீண்டும் ஓர் யுத்தத்தினை கொண்டு வந்து அதன் மூலம் அதிகாரத்தை கைப்பற்றலாம் என மகிந்த திட்டமிட்டுள்ளார்.

மகிந்தவின் மே தினக் கூட்டத்தில் இருந்து நாட்டில் இனவாதத்தினை ஏற்படுத்த முயற்சிகளைச் செய்து கொண்டு வரப்படுகின்றது. இது மீண்டும் ஓர் யுத்தத்திற்கு நாட்டை அழைத்துக் கொண்டு செல்லப்படும் எனவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here