இலங்கை வருகிறார் நேபாள ஜனாதிபதி

நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி (Bidhya Devi Bhandari) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

நான்கு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அவர், எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக காத்மன்டு போஸ்ட் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பின் பேரில் நேபாள ஜனாதிபதியின் இலங்கை விஜயம் அமையவுள்ளது.

ஐக்கிய நாடுகள் வெசாக் பண்டிகையின் இறுதி நாள் நிகழ்வில் நேபாள ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்துகொள்ள உள்ளார்.

2015 ஆம் ஆண்டு நேபாள ஜனாதிபதியானதன் பின்னர் பித்யா தேவி பண்டாரி மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு விஜயம் இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here