நடிகர் விஜய் சேதுபதி கதை, திரைக்கதை எழுதி தயாரித்து நடிக்கவுள்ள புதிய படத்தை ‘ஆரஞ்சு மிட்டாய்’ பட இயக்குநர் பிஜு விஸ்வநாத் இயக்கவுள்ளார்.

பன்னீர்செல்வம் இயக்கி வரும் ‘கருப்பன்’ படத்தில் நாயகனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, ‘சீதக்காதி’, ‘அநீதி கதைகள்’, ’96’, ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’, ‘ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.

இவ்வாறாக தனது வேலைப்பளுவிற்கு மத்தியில் விஜய் சேதுபதி திரைப்படமொன்றிற்கான கதை, திரைக்கதை எழுதியுள்ளார். விஜய் சேதுபதியே நடித்து தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.