சுதந்திரக் கட்சி அரசில் இருந்து வெளியேறுமா?

ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலம் எதிர்வரும் ஆகஸ்ட் 21 ஆம் திகதியுடன் முடிவடையவுள்ளது.

இதனால், தொடர்ந்தும் ஆளும் கட்சியில் இருக்காது எதிர்க்கட்சியுடன் இணைந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் தொடர்ந்தும் இணைந்து செயற்பட்டால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அழிவதை தடுக்க முடியாது.

இதனால்,கட்சியை அழிவில் இருந்து தடுக்க அரசாங்கத்தில் இருந்த விலக வேண்டும் என இவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்ட உள்ளதாக தெரியவருகிறது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுப்பதன் மூலம் கட்சிக்கு புதிய சக்தியை பெற்றுக்கொடுக்க முடியும் என இந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் இரண்டு கட்சிகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர்.

அத்துடன், இரண்டு வருடகாலத்திற்காக இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இரண்டு தரப்பும் இணங்கினால், உடன்படிக்கையை நீடிக்க முடியும் எனவும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், எப்படி இருந்த போதிலும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் காலம் நீடிக்கப்பட்டு இரண்டு கட்சிகள் தொடர்ந்தும் இணைந்து ஆட்சி நடத்தும் என அரசியல் அவதானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here