நீதிமன்றத்தில் துப்பாக்கி பிரயோகம்: சந்தேகநபர் கைது

பாதாள உலக தலைவரான சமயங் என்ற அருண தமித் உதயங்க என்பவர் மீது கடுவலை நீதிமன்றத்தில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தலங்கம பொலிஸ் நிலையத்தின் மேல்மாகாண புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் இந்த சந்தேகநபரை கொஸ்வத்த பிரதேசத்தில் கைது செய்துள்ளனர்.

தொலவத்தகே சமிந்த பிரசாத் சபரமாது என்ற 35 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் இந்த நபருக்கு தொடர்பு இருக்கின்றதா என்பதை அறிய விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கட்ந்த 2015 ஆம் செப்டம்பர் 23 ஆம் திகதி கடுவலை நீதிவான் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணை ஒன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சமயங் என்ற பாதாள உலக தலைவரை குறிவைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எவ்வாறாயின் களுத்துறை சிறைச்சாலை பேருந்து மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது சமயங் உட்பட சிலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here