பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்த இந்தியா முன்வரவேண்டும்

பலாலி விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு புனரமைப்பு செய்து தருவதற்கு இந்திய அரசு அக்கறை செலுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) கேட்டுக்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதுவரின் அலுவலகத்தில், ஈ.பி.டி.பி கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர்களுக்கும், துணைத்தூதுவர் நடராஜனுக்குமிடையே நடைபெற்ற சந்திப்பின்போதே குறித்த விடயம் வலிறுத்தப்பட்டுள்ளது.

இதன்போது, இதுவரை மீள்குடியேறவுள்ள எமது மக்களுக்கு வீட்டுத்திட்டம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில், இந்திய அரசு இன்னும் அதிகமாக உதவ வேண்டும் என்றும் இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த இந்திய மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய துணைத்தூதுவருடனான குறித்த சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட நிர்வாகச் செயலாளர் ஜெகன், மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன், மாவட்டத்தின் மேலதிக நிர்வாகச் செயலாளர் றங்கன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here