ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பேச்சு

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு இன்று (சனிக்கிழமை) டெல்லியில் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது, தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி இணைந்து முன்னெடுக்க உள்ள செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, கருணாநிதியின் 60ஆம் ஆண்டுகால சட்டப்பேரவை வைர விழாவில் பங்கேற்குமாறு ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ஆம் திகதி சட்டப்பேரவை வைரவிழா நடைபெறும் என அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த வைரவிழா நிகழ்வில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here