ஆபத்தான நிலையிலுள்ள பாலம் புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை

நுவரெலியா மன்றாசி நகரத்திலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள பாலம், பாதுகாப்பு கம்பிகள் பொருத்தப்படாத நிலையில் வெடிப்புற்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டயகம, அக்கரப்பத்தனை மற்றும் ஏனைய பிரதேசங்களிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் செல்லும் பிரதான வீதியிலேயே இந்த பாலம் அமைந்துள்ளது.

இந்த பாலம் 2005ஆம் ஆண்டு மன்றாசி நகரத்திலிருந்து போடைஸ் வரைக்கும் காபட் பாதையாக செப்பனிடப்பட்ட போதிலும், மேலும் இதை புனரமைப்பதற்கு போதிய பணம் இல்லை என கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இந்த பாலம் பாதுகாப்பு கம்பிகள் இல்லாமையினால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதோடு விபத்தில் பலர் பாதிக்கப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அநேகமாக இரவு நேரங்களில் முச்சக்கர வண்டிகள் விபத்துக்குள்ளாவதோடு, இதுவரையிலும் இந்த பாலத்தில் சுமார் 18 விபத்துக்கள் சம்பவித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பாடசாலை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் இந்த பாலத்தினை பயன்படுத்தும் அதே வேளை வாகனங்கள் வரும் வேளையில் இந்த பாலத்தினை கடக்க முடியாத சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த பாலத்தை புனரமைத்து தருமாறு மலையக அரசியல்வாதிகளிடமும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடமும் பிரதேச மக்கள் முறையிட்டுள்ள போதும் எவரும் இதுவரை கவன்த்திற் கொள்ளவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் கவனத்திற் கொண்டு வெகுவிரைவில் புனரமைத்து தரவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here