இலங்கை கடல் எல்லையில் சீன கப்பல் மீது துப்பாக்கி பிரயோகம்?

இலங்கை கடல் எல்லையில் சீன கப்பலுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக வெளியாகும் செய்திகளை நிராகரிப்பதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய இணையத்தளங்கள் மாத்திரம் சில இந்த சம்பவம் தொடர்பில் செய்தி வெளியிட்டுள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அந்த தகவலை அடிப்படையாக கொண்டு குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது என்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஏற்றுக் கொள்ள கூடிய தகவல்கள் ஒன்றும் பதிவாகவில்லை என பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன கப்பல் ஒன்றுக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவம் இலங்கை கடல் எல்லைக்குள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here