தாணியங்கி கார்களை சோதனை செய்யும் சம்சுங் நிறுவனம்

தென் கொரியாவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான சம்சுங் அந்நாட்டில் தாணியங்கி கார்களை சோதனை செய்ய இருக்கிறது. இதற்கான அனுமதியை சம்சுங் நிறுவனத்திற்கு தென் கொரியா வழங்கியுள்ளது.

உலகின் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களும் தாணியங்கி கார்களை தாயரித்து வெளியிடும் பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறது. தாணிங்கி கார் மற்றும் இதர வாகனங்கள் இயங்கும் வழிமுறைகள் கண்டறியப்பட்டு விட்டாலும், சாலைகளில் எவ்வித இடையூறும் ஏற்படுத்தாமல் இயங்க வைக்கும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சம்சுங் நிறுவனம் தனது தாணியங்கி கார்களை சோதனை செய்வதற்கான அனுமதியை அந்நாட்டு அரசிடம் கோரியிருந்தது. இந்நிலையில், சாம்சங் தனது தாணியங்கி கார்களை சோதனை செய்ய தென் கொரிய அரசு அனுமதி வழங்கியுள்ளது. சாம்சங் மென்பொருள் மற்றும் சென்சார்களை கொண்டு தாணிங்கி கார்களை சோதனை செய்ய இருக்கிறது.

இதேபோன்று பிரென்ச் கார் தயாரிப்பு நிறுவனமான பியூஜியோட் பாஸ்டன் மற்றும் நுடோனோமி நிறுவனங்களுடன் இணைந்து சிங்கப்பூரில் தாணியங்கி கார்களை சோதனை செய்ய இருக்கிறது. நுடோனோமி நிறுவனத்தின் மென்பொருள், சென்சார் மற்றும் கணினி பாகங்கள் உள்ளிட்டவை பியூஜியோட் 3008 மாடல்களில் இன்ஸ்டால் செய்யப்படுகிறது.

பின் இதற்கு தேவையான தொழில்நுட்பங்களை பொருத்தி, முதற்கட்ட சோதனைகள் ஆரம்பிக்கும் என நுடோனோமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் வெளியான தகவல்களில் ஐந்தாம் நிலை தாணியங்கி முறைகளில் இயக்குவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தாணியங்கி முறைகளின் ஐந்தாம் நிலையில் ஓட்டுநரின் எவ்வித உதவியும் இன்றி வாகனம் தானாகவே இயங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதேபோன்ற தொழில்நுட்பம் கொண்ட கார்களை உருவக்க பல்வேறு நிறுவனங்களும் பணியாற்றி வருகின்றன.

முன்னதாக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை வைத்திருக்கும் டைம்லெர் மற்றும் ராபர்ட் போஷ் நிறுவனங்கள் இணைந்து தாணியங்கி கார்களை தயாரிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், பி.எம்.டபுள்யூ மற்றும் இன்டெல் மற்றும் மொபைல்ஐ நிறுவனங்கள் இணைந்து தாணியங்கி கார்களை தயாரித்து வருவதாக தெரிவித்திருந்தன.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here