பல வருடங்களாக வைத்தியசாலையில் தங்கியிருக்கும் தாய்! கண்டுகொள்ளாத பிள்ளைகள்

களுபோவில போதனா வைத்தியசாலையில் பல வருடங்களாக தங்கியுள்ள 72 வயதுடைய தாய் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

தெனியாய,சியபலாகொடை பிரதேசத்தை சேர்ந்த லதா அபேவிக்ரம என்ற தாயே இவ்வாறு பல வருடங்களாக தங்கி வந்துள்ளார்.

குறித்த தாய், பல பிள்ளைகளை பெற்றிருந்த போதிலும், ஆதரவற்ற நிலையில் வைத்தியசாலையின் வெளி பகுதியில் தங்கி வந்துள்ளார்.

ஒரு கண் பார்வை இழந்து,இரண்டு கால்களும் காயமடைந்து அவதிப்படும் குறித்த தாயாரை அவரது பிள்ளைகள் தனிமையில் விட்டுச் சென்றுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இந்த தாயாருக்கு, குறித்த பகுதியில் உணவுகள் கிடைத்தால் மாத்திரமே சாப்பிடுவதாக அவர் கூறியுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here