இன்றைய ராசி பலன் 08/5/2017

மேஷம் : அனைவரிடமும் அன்புடன் பழகுவீர்கள். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர்கள் விண்ணப்பித்த கடனுதவி கிடைக்கும். பெண்கள் சிக்கனத்தால் சேமிக்க முயல்வர்.

ரிஷபம் : நண்பர்களால் உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் சுமாரான வருமானம் வரும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். பெண்கள் ஆன்மிக நிகழ்ச்சியில் பங்கேற்பர்.

மிதுனம் : நேர்மை குணத்துடன் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தி ஆதாயம் காண்பீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பணியாளர்கள் பணி விஷயமாக வெளியூர் செல்வர்.

கடகம் : புதியவர்களிடம் நெருங்கிப் பழக வேண்டாம். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். பணியாளர்கள் பணிச்சுமையைச் சந்திக்கலாம். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேர தாமதமாகும்.

சிம்மம் : உறவினர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபரிமித வளர்ச்சி உண்டாகும். விருந்து உபசரிப்பில் கலந்து கொள்வீர்கள். புத்திரரின் நற்செயல் மனதை மகிழ்விக்கும்.

கன்னி : உழைப்புக்குரிய நற்பலன் உங்களைத் தேடி வரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். லாபம் உயரும். இஷ்ட தெய்வ வழிபாடு நிறைவேறும். மாணவர்கள் அக்கறையுடன் படிப்பர்.

துலாம்: மனதில் இருந்த குழப்பம் மறையும். உடல்நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய உத்தி மூலம் ஆதாயம் உயரும். மனைவியின் செயல்பாடு பெருமை சேர்க்கும்.

விருச்சிகம் : பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உழைப்புக்கேற்ப வளர்ச்சி உண்டாகும். திடீர் செலவால் சேமிப்பு கரையும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம்.

தனுசு : எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் கூடும். குடும்பத்தினரின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். உறவினர் வருகையால் வீட்டில் கலகலப்பு உண்டாகும்.

மகரம் : உறவினருக்கு இயன்ற அளவில் உதவி செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் மிதமான வருமானம் உண்டாகும். விருந்து, விழாவில் பங்கேற்று மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர்.

கும்பம் : நிதானத்துடன் செயல்படுவது அவசியம். தொழில், வியாபாரத்தில் புதிய உத்தி மூலம் லாபம் காண்பீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். இஷ்ட தெய்வ வழிபாட்டில் ஈடுபடுவீர்கள்.

மீனம் : அன்றாட பணிகளில் தாமதம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் போட்டி குறைவதால் வருமானம் கூடும். பெண்கள் வீட்டுச் செலவில் சிக்கனத்தைக் கடைபிடிப்பர். ஆரோக்கியத்தில் அக்கறை உண்டாகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here