மருத்துவர் பாதெனிய சேவை புறக்கணிப்பில் பங்கேற்கவில்லை

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த 5ஆம் திகதி நடத்திய சேவை புறக்கணிப்பு போராட்டத்தில் சங்கத்தின் தலைவரான விசேட மருத்துவ நிபுணர் அனுருத்த பாதெனிய பங்கேற்கவில்லை என சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே தெரிவித்துள்ளார்.

மருத்துவர் பாதெனிய சிறுவர் மருத்துவமனையில் சேவையாற்றி வருவதால், அந்த வைத்தியசாலைகளில் சேவை புறக்கணிப்புகள் நடத்தப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அளுத்கே இதனை கூறியுள்ளார்.

அத்துடன் தனியார் மருத்துவமனைகளில் பாதெனிய அன்றைய தினம் பணியாற்றவில்லை.

எனினும் தற்போதைய அரசியல்வாதிகள் நவலோக்க வைத்தியசாலை வழங்கிய பற்றுச்சீட்டு ஒன்றை பயன்படுத்தி சேறுபூசும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் மருத்துவர் ஹரித அளுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் சேவை புறக்கணிப்பு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இதன் காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here