வவுனியாவில் 5வது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் போராட்டம்

தமக்கு நிரந்தர நியமனம் வழங்க கோரி வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பணியாற்றும் 51 சுகாதார தொண்டர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் ஐந்தாவது நாளாக இன்று (08) தொடர்கிறது.

வவுனியா பிராந்திய சுகாதார பணிமனையில் கடந்த 1994 ஆம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்களும் பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக தமது கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடமையாற்றி, பல உயிர்களை காப்பாற்றிய எங்களுக்கு நியமனம் இல்லையா?

நீண்ட காலமாக சேவையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? வெயில், மழை பாராமல் ஊதியம் இல்லாமல் கடமையாற்றிய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா?

வவுனியாவில் டெங்கு நோயை கட்டுப்படுத்திய எங்களுக்கு நிரந்தர நியமனம் இல்லையா? போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் தமக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை போராட்டத்தினை தொடரவுள்ளதாகவும் இதன் போது சுகாதாரத் தொண்டர்கள் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here