2020 தேர்தலின் பின்பும் தேசிய அரசே அமையும்

எதிர்வரும் 2020 இல் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலை அடுத்தும் தேசிய அரசே அமைக்கப்படும் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

தேசிய அரசை நிராகரிக்கும் அளவுக்கு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் தமிழ் ஊடகம் ஒன்றுக்கு அவர் கூறியுள்ளார்.

நாம் வெற்றிகரமான மே தினக் கூட்டம் ஒன்றை நடத்தி முடித்துள்ளோம். எமது அரசியல் பலம் அதிகரித்துள்ளதை நாம் உணர்கின்றோம்.

எமது அடுத்த நகர்வுக்கு அது உந்து சக்தியாக அமைந்துள்ளது. இரண்டு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து அமைத்த இந்த நல்லாட்சி தொடர்வதன் மூலம்தான் நாட்டைப் பூரணமாக அபிவிருத்தி செய்ய முடியும் என்பதை நாம் உணர்ந்துள்ளோம்.

இதன் காரணமாக 2020 இல் நடைபெறப்போகும் நாடாளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்தும் தேசிய அரசே அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வு உண்டு. இதனால் மீண்டும் தேசிய அரசை அமைப்பது சாத்தியமாகும் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here