அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கை பெண்!

அமெரிக்காவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி ஒன்றில், இலங்கையை சேர்ந்த வீராங்கனை ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் நேற்று-முன்தினம் நடைபெற்ற 2017 Eugene மரதன் ஓட்டப் போட்டியில் பெண்கள் பிரிவில் இலங்கையை சேர்ந்த வீராங்கனை வெற்றி பெற்றுள்ளார்.

இலங்கை விளையாட்டு வீராங்கனையான ஹிருணி விஜேரத்ன என்பவரே இந்த வெற்றியை பதிவு செய்துள்ளார்.

ஹிருணி விஜேரத்ன 2017 Eugene மரதன் போட்டியினை நிறைவு செய்வதற்கு 2:43:31 மணி நேரத்தை செலவிட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் ஹிருணி வெளிப்படுத்திய நேரத்திற்கமைய அவர் உலக சம்பியன்ஷிப் தடகள போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளார்.

இம்முறை உலக சம்பியன்ஷிப் தடகள போட்டியில் தகுதி பெற்ற முதல் இலங்கை வீராங்கனை ஹிருணியாகும்.

ஹிருணி அமெரிக்காவில் வாழ்வதோடு அங்கிருந்து போட்டிக்கான பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை அநுருந்த இந்திரஜித் உலக சம்பியன்ஷிப் தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்ற இலங்கை வீரராகும்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here