கஞ்சாப் பொதிகளுடன் கைது செய்யப்பட்ட 3 இந்தியர்கள் விடுதலை

மன்னார் கடற்பரப்பில் கடந்த ஆண்டு கஞ்சாப் பொதிகளுடன் கைது செய்யப்பட்ட 3 இந்தியர்களும் நேற்று மன்னார் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கஞ்சாப் பொதிகள் கடத்தி வந்த நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு மன்னார் பொலிசாரிடம் குறித்த 3 இந்தியர்களும் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.

இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட மூவரையும் மன்னார்ப் பொலிசார் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியதுடன், தடுப்புக்காவலில் வைத்திருந்தனர்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த மூவரும் நேற்று மன்னார் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டு யாழ். இந்தியத் துணைத்தூதரக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டனர்.

அந்த மூவரையும் இந்தியத் துணைத்தூதரகத்தினர் யாழ்ப்பாணம் அழைத்து வந்து ஓர் விருந்தினர் விடுதியில் தங்க வைத்துள்ளனர்.

இந்த மூவரும் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 11 ஆம் திகதி இலங்கை வரவுள்ள நிலையில் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் விடுதலை இடம் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here