வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சங்க பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்

வவுனியாவில் இலங்கை போக்குவரத்து சங்க சாலை நடத்துனர் மீது இனந்தெரியாதவர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தாக்குதலுக்கு இலக்கான நடத்துனர் வவுனியா செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பேருந்து நிலையத்திலிருந்து பூவரசங்குளம் ஊடாக செட்டிகுளம் செல்லும் இ.போ.ச. பேருந்தில் குளுமாட்டுச்சந்தியில் ஏறிய நான்கு பேரைக் கொண்ட குழுவினர், சண்முகபுரம் பகுதியில் இறங்கும்போது நடத்துனரை தகாத வார்த்தைகளால் பேசியதோடு நடத்துனர் மீது தாக்குதலும் மேற்கொண்டுள்ளனர்.

இது குறித்து செட்டிகுளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here