காரைதீவு விபுலானந்தா கல்லூரியின் மாபெரும் பொதுச்சந்தை

இயற்கை வேளாண்மை ஊடாக நச்சுத்தன்மையற்ற உணவுப்பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிப்போம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் சந்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த சந்தை காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில், பாடசாலையின் அதிபர் தி.திவ்யராஜன் தலைமையில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றதுடன், பின்னர் விபுலானந்தா அரங்கில் இயற்கை உணவுப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை வலய விவசாய பாட ஆசிரியர் ஆலோசகர் சி.செல்வராஜா கலந்து கொண்டிருந்ததுடன், பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here