மகாராஷ்ட்ரா மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக உயர்வடைந்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதன்படி கடந்த ஜனவரி 1ஆம் திகதி முதல் மே 8ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் H1N1 வைரஸ் பாதிப்பின் மூலம் இவ் உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக மகாராஷ்ட்ரா மாநிலத்தின் குடும்பநல மையத்தின் இணை தலைவர் முகுந்த் டிகிக்கர் தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக பூனேவில் அதிகபட்சமாக 55 பேர் பன்றிக் காய்ச்சல் மூலம் உயிரிழந்துள்ளதோடு, நாஷிக் மாவட்டத்தில் 26 பேர் மற்றும் அகமத்நகரில் 17 பேர், அமராவதி மாவட்டத்தில் 8 பேர், அகோலா மற்றும் சோலாப்பூர் மாவட்டங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.