மகிந்தவை நேசித்தவருக்கு கிடைத்த பரிசு

தனிப்பட்ட தேவைக்காகவே எவ்வித அறிவிப்பும் இன்றி தன்னை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதாக வட மத்திய மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் கே.என். நந்தசேன தெரிவித்துள்ளார்.

தன்னை பதவியில் இருந்து நீக்கியதை இன்று காலையிலேயே அறிந்து கொண்டதாகவும் பதவி பறிக்கப்பட்டமை குறித்து தான் கவலையடையவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று மதியம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பொரும்பாலான மக்கள் தற்போது சுதந்திரமாக வாழ்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே காரணம். அவரை நான் வாழ்நாள் முழுவதும் நேசிப்பேன்.

மகிந்த ராஜபக்ச மீது கொண்டுள்ள பற்றுதல் காரணமாகவே நான் அமைச்சர் பதவியில் இருந்து விலக்கப்பட்டேன். எனினும் பதவி பறிக்கப்பட்டமை குறித்து கவலையில்லை.

அனுராதபுரம் மக்களுக்காக தொடர்ந்தும் சேவையாற்ற போவதாகவும் முன்னாள் அமைச்சர் நந்தசேன குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here