உயிர்காக்கும் உன்னத பணியில் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியம்.

உயிர்காக்கும் உன்னத பணியில் கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியம்.

கனடா செந்தில்குமரன் நிவாரண நிதியம் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் போரினாலும், நோயினாலும் பாதிக்கப்பட்ட பல மக்களுக்கு 2004 ஆம் ஆண்டு முதல் நிதியுதவிகள் மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்கிவருகின்றது. இதுவரை இந்நிதியத்தினூடாக இருதயநோய் மற்றம் கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடிய இருபத்தொன்பது (29) நோயாளிகளுக்கு சத்திர சிகிச்சை உட்பட ஏனைய மருத்துவ உதவிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு அவர் தம் உயிர்கள் பாதுகாக்கப்பட்டது.

கனடா செந்தில்குமரன் நிவாரணநிதியத்தின் இணைப்பாளர் திருவாளர் செந்தில்குமரன் அவர்கள் கனடாவில் மின்னல் மியூசிக் நிகழ்ச்சியின் இணைப்பாளரும் ஏற்பாட்டாளருமாவர். ‘நிவாரணம்’ என்னும் இசை நிகழ்ச்சியினுடாகவும் பரோபகாரர்களின் நன்கொடைகள் மூலமாகவும் இந்நிதியத்தை வளர்த்து வருகிறார்.
முற்றுமுழுதாக வடக்கு, கிழக்கு வாழ் துன்புறும் மக்களின் துயர்துடைக்க பல இடர்களுக்கு முகம் கொடுத்து சுமை சுமந்து இரவு பகல் நோக்காது விழித்திருந்து உழைக்கும் செந்தில்குமரன் தனது நிதியத்தினூடாக நம்மக்களின் உயிர்காத்து வருவது காலத்தில் செய்யும் கனதியான பணியாகும்.
அண்மையில் கிளிநொச்சி மாவட்டம், புலோப்பளை பகுதியில் வசித்துவரும்  நான்கு பிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் கந்தசாமி (வயது 45) என்பவருக்கு உடனடியாக இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவர்களால் கூறப்பட்ட வேளை, உயிருக்காகப் போராடும் அத்தந்தைக்கு       செந்தில்குமரன் அவர்கள் தனது நிதியமூடாக ரூபா பத்து இலட்சம் (1000000)  வழங்கியதால் கொமும்பு லங்கா கொஸ்பிற்றல் (  தனியார் மருத்தவமனையில் அவருக்கான இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தற்போது அவர் நலம் பெற்றுவருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here