ஸ்மார்ட் கையடக்க தொலைபேசியை விட குறைந்த எடையைக் கொண்ட செயற்கைக் கோள் ஒன்றை இந்தியாவின் சென்னையைச் சேர்ந்த 18 வயதான மாணவன் ஒருவர் தயாரித்துள்ளார்.

தரம் 12இல் கல்விகற்கும் ரிஃபாத் ஷாருக் என்ற மாணவனே இச் செயற்கைக் கோளை தயாரித்துள்ளார்.

அமெரிக்க விண்வெளி நிறுவனம், நாசா மற்றும் idoodlelearning Inc. என்ற சர்வதேச கல்வி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்திய போட்டியொன்றிலேயே குறித்த மாணவன் இச் சிறிய செயற்கைக் கோளை தயாரித்துள்ளார்.

வலுவூட்டப்பட்ட கார்பன் ஃபைபர் பொலிமரால் வெறும் 64 கிராமில் தயாரிக்கப்பட்ட குறித்த செயற்கைக் கோள், 12 நிமிடத்தில் பயணிக்கக் கூடியதென்றும் எதிர்காலத்தில் விண்வெளிக்கு பயணிக்கும் போது ஏற்படும் செலவைக் குறைக்கும் என்றும் மாணவன் ரிஃபாத் ஷாருக் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்கைக் கோளானது எதிர்வரும் ஜூன் மாதம் 21ஆம் திகதி நாசாவால் விண்வெளியில் ஏவப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.