எனக்கு பதவி வழங்கப்படுவதை சிலர் எதிர்க்கின்றனர் : பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியில் தனக்கு பதவி வழங்குவதை சிலர் எதிர்த்து வருவதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நடந்த வைபவம் ஒன்றுக்கு பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

கட்சியில் பிரதித் தலைவர் பதவியை தனக்கு வழங்குவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க சில காலங்களுக்கு முன்னர் தனக்கு அறிவித்திருந்தாகவும் அவர் கூறியுள்ளார்.

பதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும் தான் யார் என்பது ஐக்கிய தேசியக் கட்சியினர் அனைவருக்கும் தெரியும் எனவும் இதனால் தான் பதவியை கோரி பின்னால் செல்லப் போவதில்லை என்றும் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பிரதித் தலைவர் பதவி உட்பட மேலும் சில பதவியை தனக்கு வழங்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனால், கட்சியில் உள்ள சிலர் மாத்திரம் இதனை எதிர்ப்பதாக தான் புரிந்து கொண்டதாகவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here