மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கான ஸ்கேனர் கொள்வனவு தாமதம்

மஹரகம புற்றுநோய் மருத்துவமனைக்கான பெட் ஸ்கேனர் இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் தாமதிக்கப்பட்டு வருகின்றது.

புற்றுநோயாளிகளின் வசதி கருதி குறித்த இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான தொகையை தனியார் நிறுவன உரிமையாளர் முஹம்மத் என்பவர் முன்னின்று சேகரித்துக் கொடுத்திருந்தார். சுமார் 250 மில்லியன் ரூபா இதற்காக சேகரிக்கப்பட்டிருந்தது.

இத்தொகை கடந்த வருடம் ஜுன் மாதமளவில் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டிருந்தது.

எனினும் அரசாங்கத்தின் டெண்டர் கொள்கை மற்றும் பெட் ஸ்கேனரைக் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைக்குழுவின் தலையீடு என்பன காரணமாக இதுவரை குறித்த பெட் ஸ்கேனர் இயந்திரம் கொள்வனவு செய்யப்படவில்லை.

இதன் காரணமாக புற்றுநோயாளர்கள் தொடர்ந்தும் அசௌகரியங்களுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here