வடமத்திய மாகாண சபைக்கு குறிவைக்கும் கூட்டு எதிர்க்கட்சி

வடமத்திய மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பெரும்பாலான உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மாகாண சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நடக்கும் அநீதிக்கு எதிர்ப்பு தெரிவித்து, இவர்கள் சபையில் சுயாதீனமாக இயங்க உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடமத்திய மாகாண சபையின் 33 உறுப்பினர்களில் 22 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சேர்ந்தவர்கள்.

வடமத்திய மாகாண சபையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 9 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.

சபையில் அங்கம் வகிக்கும் பெரும்பாலான உறுப்பினர்கள் சுயாதீனமாக இயங்கினால், சபை நடவடிக்கைகளை நடத்திச் செல்வதில் தடையேற்படும் எனவும் ரஞ்சித் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், வடமத்திய மாகாண சபையின் அதிகாரத்தை கூட்டு எதிர்க்கட்சி கட்டாயம் கைப்பற்றும் என முன்னாள் அமைச்சரான நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here