11 நாளாகவும் தொடரும் இரணைதீவு கடற்தொழிலாளர்கள் போராட்டம்

கிளிநொச்சி இரணைதீவு பகுதியில் தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுமதிகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதற்கான அனுமதிகளை நல்லாட்சி அரசு பெற்றுத்தரவேண்டும் என கோரி இரணைதீவு கடற்தொழிலாளர்களின் குடும்பங்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த போராட்டம் இன்று 11 நாட்களாக தொடர்ந்துள்ளது. கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தின் அதிக கடல்வளம் கொண்ட பகுதியாக காணப்படும் இரணைதீவு என்ற கடற்தொழில் கிராமத்தில் வாழ்ந்த 242 குடும்பங்கள் கடந்த 1992 ஆம் ஆண்டு இந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டபோதும்,

இதுவரை இந்த பகுதி மக்கள் தங்களது சொந்த நிலத்தில் மீள்குடியமர்வதற்கோ அல்லது தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுதிகளோ இதுவரை வழங்கப்படவில்லை.

இதற்கான அனுமதிகளை பெற்றுத்தருமாறும் அந்த பகுதி கடற்தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இரணைதீவுக் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் 1992 ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக வெளியேற்றப்பட்டு முழங்காவில் பகுதியில் இரணைமாதா நகர் என்ற மாதிரிக்கிராமம் உருவாக்கப்பட்டு இந்த மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.

இவர்களுக்கான வீட்டுத்திட்டங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் என்பனவும் ஏற்படுத்தப்பட்டுள்ளபோதும் இவர்களுக்கான கடற்தொழிலுக்கான வசதி வாய்ப்புக்கள் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை.

இந்த நிலையில் இவ்வாறு தங்கியுள்ள மக்கள் எங்களது சொந்த இடத்திற்கு சென்று தொழில் செய்வதற்கும் இரணைதீவில் உள்ள தங்களது கால்நடைகள் காணிகள் என்பவற்றை பராமரிப்பதற்கும் உரிய அனுமதிகள் வழங்கப்படவேண்டும் என கடந்த 2010ம் ஆண்டு முதல் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால் இதற்கான அனுமதிகள் எவையும் இதுவரை வழங்கப்படவில்லை இந்த நிலையில் இரணைதீவு கடற்தொழிலாளர்கள் குடும்பங்கள் கடந்த 11 நாட்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here