சுகாதாரத் தொண்டர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்

வவுனியாவில் நிரந்தர நியமனம் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சுகாதார தொண்டர்களை வன்னி பராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இன்று(12) சென்று சந்தித்துள்ளார்.

சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்னால் சுகாதாரத் தொண்டர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது அவர்களின் சேவைக்காலம் மற்றும் நியமனம் வழங்குவதில் சுகாதார அமைச்சு கொண்டுள்ள நிலைப்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

இதே வேளை குறித்த சுகாதார தொண்டர்கள் இன்று(12) ஒன்பதாவது நாளாகவும் தமக்கு சேவைக்காலத்தின் அடிப்படையில் நிரந்தர நியமனம் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here